ரொம்ப நாளா தமிழ ப்ளாக் எழுதணும்னு ஆசை. ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல. அப்படியே எழுத எதாவது கரு கிடைச்சா, அத எப்படி எழுதறதுன்னு தெரியல - அதாவது ப்ளாக் முழுசும் சுத்த தமிழ எழுதறத இல்ல ஆங்கிலம் கலந்து எழுதறத. எப்படியோ, தமிழ ப்ளாக் எழுதணும் என்ற ஆசை இப்படியாவது நிறைவேருச்சினா சரி. இந்த ப்ளாக்கை தமிழ எழுதறதற்கு காரணமே ஒரு தமிழ் வார்த்தை தாங்க.
என்னோட அலுவலகம் முன்னாடி நுங்கம்பாக்கத்துல இருந்துச்சு. நான் புரசைவாக்கத்துல இருக்கிறதுனால இது பக்கம இருந்துச்சு. ஆனா இப்போ அலுவலகத்த தரமணிக்கு மாத்திட்டாங்க. இப்போ நான் புரசைவாக்கத்துல இருந்து பேருந்துல சென்ட்ரல் வந்து பூங்கா ரயில் நிலையதில்லிருந்து பறக்கும் ரயில தரமணிக்கு வரேன். ரயில் பயணம் எனக்கு புதுசில்ல. ஏன்ன நான் கல்லூரிக்கு ரயில தான் நாலு வருஷம் போனேன். ஆனா பேருந்துல போறது பல வருஷம் கழிச்சு. இப்போ சென்னைல பேருந்து எல்லாம் முன்ன மாதிரி கிடையாது. இப்போ பல பேருந்துக்கு கதவு இருக்கு. முன்ன மாதிரி பூட்போர்ட் அடிக்க முடியாது. இப்போ AC வசதி எல்லாம் பேருந்துல இருக்கு. நான் AC பேருந்துல போனது இது தான் முதல் தடவ. குறிப்புக்கு வரேன்.
பொதுவா படிக்கட்டு பக்கத்துல இருக்கிற இருக்கை வயசானவங்களுக்கும் உடல் ஊனமுற்றோர்க்கும் முன்னுரிமை. இதுக்காக அந்த இருக்கை மேல இன்னார்க்கு முன்னுரிமையினு எழுதிருப்பாங்க. அண்மையில் நான் பேருந்துல போகும் பொது, உடல் ஊனமுற்றோர்க்கு அவங்க உபயோகித்திருந்த வார்த்தை பார்த்து நான் ஆச்சிரியப்படேன். அது என்ன வார்த்தை தெரியுமா? மாற்று திறனாளிகள். கொஞ்சம் நேரம் இந்த வார்த்தைய பத்தி யோசித்துப்பார்த்தேன் - மாற்று திறனாளிகள். திறன்ன ஆங்கிலத்துல abilityனு அர்த்தம். நமக்கு எல்லாருக்கும் திறன் இருக்குங்க. நடக்க திறன். ஓட திறன். பேச திறன். பார்க்க திறன். வேலை செய்ய திறன். கேட்க திறன். நுகர திறன். ஆனா இதுல எதாவது ஒரு திறன் இல்லாதவங்க தான் மாற்று திறனாளிகள்னு கூப்பிடுறாங்க. எதாவது ஒரு திறன் இல்லைன்றது இல்லாமை. ஆனா நம்ம தமிழ் மொழி இப்படி போன்றவர்களுடைய இல்லாமைய மறைத்து இருக்கிறதை சுட்டி காட்ட தான் இப்படி ஒரு பெயர் கொடுத்திற்காங்க.
நம்ம கிட்ட இல்லாத ஒரு திறன் - மாற்று திறன். வேற எந்த மொழிலாவது இப்படி ஒரு அழைப்பு பெயர் இருக்கா? ஆங்கிலத்துல visually/physically challenged னு ஒரு அழைப்பு இருக்கு. ஆனா இந்த வார்த்தை இல்லாமையாதான் குறிக்குது. People with special needs னு சொன்னாகூட தேவைங்கறது ஒரு இல்லாமையே.
சரி. மாற்று திறனாளின்ற வார்த்தைக்கு ஆங்கிலத்துல மொழிபெயர்ப்பு என்ன? மாற்றுக்கு different னு சொல்ல முடியாது. ஏன்ன ன வித்தியாசம் என்று அர்த்தம். மாற்று என்ற வார்த்தையின் வேர் சொல் மாறு அல்லது மாறுதல். CHANGE. இத வச்சி ஒரு வார்த்தை அமைச்சா changing ability னு சொல்லாமா? இல்லை. மாற்று திறனாளி என்ற வார்த்தை தரும் அர்த்தம் ஆங்கில வார்த்தைக்கு இல்ல. இது தாங்க வேற எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு நம்ம தமிழ் மொழிக்கு மட்டும் இருக்கிற சிறப்பு.
நான் ஒரு மொழி பைத்தியம் கிடையாதுங்க. தமிழன் தமிழ் மொழில மட்டும் தான் பேசணும் என்ற பறைசாற்றுபவன் இல்லைங்க. ஆனா தமிழ இருக்க இப்படிப்பட்ட சிறப்பை எடுதுக்காட்டதான் இந்த ப்ளாக்யை எழுதிறேன். வாழ்க தமிழ்!!!