அச்ட்ப் ச்போயே அல்ப்க்ப் ந்க்கோல் ஒவ்ல்வ்னாவ் ப்ஜ்களோ க்கியல்ன்ல்ம்க்......அட தமிழ் தாங்க. ஆனா ஒண்ணும் புரியவில்லையா? எனக்கும் அப்படி தாங்க இருந்துச்சி இந்த படத்தை பார்த்த பிறகு. சாதாரணமா ஒரு அறிவிப்பு பலகையை வச்சி, "இது விபத்து பகுதி. மெதுவாக செல்லவும்"ன்னு போட்டாலே எனக்கு புரியும். ஆனா திருச்சியில் வேலை செய்ற கதிரேசனும், அதே ஊரான அவன் காதலி மணிமேகலையும், திருச்சியிலிருந்து முதல் தடவையா சென்னைக்கு வந்த அமுதாவின் மீது காதல் வயப்பட்டு அவளைக் காண திருச்சிக்கு வந்துவிட்டு சென்னை செல்லும் சென்னை வாசியான கௌதம் - ஆகிய மூவரும் வந்த பேருந்து, கெளதமை அதே நேரத்தில் சென்னையில் தேடிவிட்டு திருச்சி செல்லும் அமுதா பயணிக்கிற பேருந்துவோடு நேருக்கு நேராக இந்த இடத்தில் மோதிக்கொண்டதால், "இது விபத்து பகுதி. மெதுவாக செல்லவும்"ன்னு அறிவுப்பு பலகை போட்டால் எப்படி இருக்கும்? இது தான் எங்கேயும் எப்போதும்.
என்னங்க தலை சுத்துதா? படம் போய் பாருங்க. படம் முடித்தவுடன், தலை ஒரு புறம் சுத்த, விழிகள் மறுபுறம் பிதுங்கும். படம் முடித்தவுடன், கடைசி படச்சுருள் போட மறந்துட்டாங்களான்னு யோசித்தேன். படம் ஒரு முழுமையாக எனக்கு தோன்றவில்லை. எப்பவுமே ஒரு விபத்தை காட்டினால், அந்த விபத்தடைந்தவர்கள் வாழ்கையில் அந்த விபத்தின் தாக்கத்தைக் காட்டினால்வொழிய அந்த விபத்தின் பங்கு பெரியதாய் இருக்காது. இந்த படத்தில் விபத்து நடந்ததை படம் துவக்கத்தில் காட்டினார்கள். படம் நடு நடுவேயும் காட்டினார்கள். படம் இறுதியிலும் காட்டினார்கள். விபத்திற்கு பிறகு என்ன நடந்ததையும் காட்டினார்கள். ஆனால் அந்த விபத்தின் தாக்கத்தைக் காட்டுவதற்குள், அபாய அறிவுப்பு பலகையை காட்டிவிட்டார்கள். கதிரேசனை இழந்த மணிமேகலையின் வாழ்க்கை அந்த விபத்துக்குப்பிறகு எப்படி மாறினது என்ன ஆனது என்பது என் மனதில் ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த வகையில் எனக்கு அங்காடி தெரு படம் பிடிக்கும். அந்த விபத்தின் தாக்கத்தை எப்படி அந்த இருவரும் கையாண்டு, அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி தொடர்ந்தது என்பதை ரொம்ப யதார்த்தனமாக காட்டியிருப்பார்கள்.
என்னை பொறுத்த வரை விபத்து நடந்த இடம் தான் படத்தின் கரு. ஏன்னா, படம் முடிந்தவுடன் அந்த விபத்து நடந்த இடத்தில் மறுபடியும் வாகனங்கள் செல்வதையும், இந்த இடத்தில் தான் ஒரு பெரிய விபத்து நடந்தது என்ற அறிகுறி மெல்ல மெல்ல சாயம் போகுகிறதையும் படத்தின் இறுதியில் காட்டியிருப்பார்கள். அந்த இடத்தில் விபத்து நடந்திருந்தாலும், மீண்டும் அதே இடத்தில் வாழ்க்கை இயங்குகிறது. ஆனால் நான்கு பேர் வாழ்கையை குறுகிய கோணத்தில் (narrow perspective) காட்டிவிட்டு, விபத்துக்கு பின்பு விபத்து நடந்த இடத்தையும் விபத்து நடந்த பல செய்தித்தாள்களையும் விபத்தை தடுக்கும் அறிவுதல் கொடுக்கும் பின் குரல்களையும் அகன்ற கோணத்தில் (broader perspective) காட்டினது ரொம்ப அற்பத்தனமாக இருந்தது. விபத்துக்கு பின்பு கதாபாத்திரங்களின் வாழ்க்கை எப்படி இயங்குகிறதை காட்ட இயக்குனர் தவறவிட்டது படத்தில் மிக பெரிய ஓட்டை.
படத்தின் திரைக்கதை மிக அருமை. ஏன்னா, இரு ஜோடிகள் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்பவர்களை குழப்பாமல் எழுமையாக காட்டினது பாராட்டக்குரியது. எல்லா கதாபாத்திரமும் நிறைவாய் நடித்துருந்தார்கள். யாரும் மிகையாக செய்யவில்லை. படத்தில் பிடித்த காட்சி: தலையில் அடிபட்ட கதிரேசனை முதலில் மருத்தவமனைக்கு அனுப்பிவிட்டு செவிலியான(nurse) மணிமேகலை எல்லாரையும் அனுப்பிவிட்டு கடைசியில் மருத்துவமனைக்குச் சென்று கதிரேசனை தேடும் பொது, ஒரு ஊழியர் ஒரு பிணத்தை டாலியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்வார். அது ஒரு வேலை கதிரேசனாக இருக்குமோவென்று மணிமேகலை அருகில் சென்று பார்க்கும் போது அது கதிரேசனே தான். உடனே என்னுடன் படம் பார்க்க வந்த நண்பனிடம் 'சூப்பர்' என்று சொன்னேன். ஏன் என்றால் கதையில் அது ஒரு பெரிய திருப்பம். கௌதம் அமுதா ஜோடியை விட கதிரேசன் மணிமேகலை ஜோடி ரொம்ப கலகலப்பாக காட்டியிருப்பார்கள். அப்படி பட்ட ஜோடி மத்தியில் இந்த ஒரு இழப்பு பார்பவர்கள் மனதில் ஒரு நெருடலாக இருக்கும். பொதுவாக தமிழ் படங்களில் கிராபிக்ஸ் ரொம்ப வெளிப்படையகாவே தெரியும். ஆனால் இந்த படத்தில் இரண்டு பேருந்தும் போதும் காட்சியை கிராபிக்ஸில் ரொம்ப அருமையாக சித்தரித்து சிறப்பு. பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக், முதல் பதினைந்து நிமிடம் பேருந்தையே காட்டினது ஆகியவை கொஞ்சம் சலிப்பை தூண்டியது. எப்போ அடுத்த பேருந்து நிற்குமிடம் வரும், இறங்கலாம்ன்னு போல தோன்றியது.
க்ளைமாக்ஸ் மற்றும் படத்தில் சொல்லப்பட்ட செய்தி, கதை திருப்பத்தின் காரணம் இவையை தவிற படம் அருமை.
கூடுதல் செய்தி #1: மும்பை இந்தியன்ஸ் மற்றும் திரினிடாட் & டொபாகோ இடைய நடத்த CLT20 ஆட்டத்தைப் பார்த்தேன். பழம் நழுவி பாலில் விழுந்து பால் இருந்த பாத்திரம் உடைந்தது போல திரினிடாட் & டொபாகோ அணி ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை நழுவ விட்டார்கள். கடைசி 6 பந்துகளில் 11 ஓட்டங்கள் மும்பை அணி எடுக்க வேண்டும். இறுதில் ஒரு பந்தில் 2 ஓட்டம் ஒரு விக்கெட் மட்டும் இருக்கும் நிலையில் திரினிடாட் & டொபாகோ அணி இரண்டாவது ஓட்டத்தை தடுக்க அற்பத்தனமாக கோட்டை விட்டுவிடுவார்கள்.
கூடுதல் செய்தி #2: கிரி பரிந்துரை செய்த 'I Saw the Devil' படம் பார்த்தேன். படத்தைப் பற்றிய கருத்துகளை கிரி ப்ளாக்கில் காணவும். என் கருத்துக்கள்:
"ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்பதி.
வில்லன்னா இவர் தாங்க வில்லன். மிரட்டலான நடிப்பு. எவ்வளவு அடி வாங்கினாலும் சைகொத்தனம் ஜாஸ்தி ஆகுதே தவிற, ஒன்றுக்கும் ஆளு அசறதா தெரியவில்லை. எனக்கு ரொம்ப பிடித்த காட்சி: க்ளைமாக்ஸ்சில் வில்லன் திருந்திட்டாருன்னு நாயகன் நினைகிறப்போ நம்ம ஆளுவோட சுயருபம் வெளியவரும். அபார நடிப்பு. ஒரு அசத்தலான கதாபாத்திரம்.
நம்ம தமிழ் படம் மாதிரி எங்க தன் காதலியின் தந்தையையும் தங்கையையும் காப்பாற்றி விடுவாரோன்னு நினைச்சேன். நல்ல வேளை இல்லை.
என்னை பொருத்த வரைக்கும் வில்லன்தான் கடைசியில் ஜெயித்தார். இந்த படத்திற்கு இது தான் சரியானதும்கூட."